BREAKING NEWS:-
Search

அதிக இணையதள இணைப்புகள் கொண்ட மாநிலங்களில் தமிழகத்திற்கு இரண்டாவது இடம்..!

சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்திய அரசின் தரவுகளின்படி, இந்தியாவிலேயே அதிக இணையதள இணைப்புகள் கொண்ட மாநிலமாக மகராஷ்டிரா உள்ளது. இந்த மாநிலத்தில் சுமார் 29.47 மில்லியன் பேர் இணைய வசதியை பெற்றுள்ளனர். 28.01 மில்லியன் இணைய இணைப்புகளுடன் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அடுத்ததாக 24.87 மில்லியன் இணைப்புகளுடன் ஆந்திர பிரதேசம் மூன்றாவது இடத்திலும், 22.63 மில்லியன் இணைப்புகளுடன் கர்நாடகா நான்காவது இடத்திலும் உள்ளது. 3.02 மில்லியன் இணைப்புகளுடன் கடைசி இடத்தில் இமாச்சல பிரதேச மாநிலம் உள்ளது.

இந்தியாவில் மொத்தம் 342.65 மில்லியன் பேர் இணைய இணைப்புகளை பெற்றிருப்பதாக அந்த தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள மொத்த இணைய இணைப்புகளில் 67 சதவீதம் நகர்ப்புறங்களில் இருப்பதாகவும், இதன் எண்ணிக்கை 111.94 மில்லியன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக நகர்ப்புற இணைய இணைப்புகள் உள்ளன. கிராமப்புறங்களை பொறுத்தவரை இந்தியாவிலேயே அதிகமாக உத்தர பிரதேச மாநிலத்தில் 11.21 மில்லியன் பேர் இணைய இணைப்புகளை பெற்றுள்ளனர்.

இந்தியாவின் இணைய வசதி பெற்றிருப்பவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் ”பாரத்நெட்” திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் உள்ள 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துக்களுக்கு இணைய வசதியை ஏற்படுத்த உள்ளதாகவும் இந்த தரவில் கூறப்பட்டுள்ளது.

பாரத் நெட் திட்டமானது மூன்று கட்டமாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டத்தில் 1 லட்சம் கிராமப் பஞ்சாயத்துகளுக்கு பைபர் இழை மூலமாக இணைய வசதியை அளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நன்றி:http://zeenews.india.com/internet-social-media/maharashta-tops-list-of-internet-subscribers-himachal-comes-in-last_1951553.html

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

விளம்பரம்

“அனைவருக்கும் இலவச இணையதளம்” என்ற திட்டத்தின் கீழ்
கிருஷ்ணகிரியை சேர்ந்த Clouds India நிறுவனம் வழங்குகிறது “இலவச இணையதள இடம்”

ஆம்,
“சொந்த இணையதளம் உலகையே சொந்தமாக்கும்”

மேலும் விபரங்களுக்கு
https://cloudsindia.in/
Mobile No : 9943094945

நேரடியாக பதிவு செய்ய
https://goo.gl/w5HlKV

இந்த சலுகையை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்…




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *