BREAKING NEWS:-
Search

அடுத்தாண்டு இந்தியாவில் 265 மில்லியன் செல்பேசிகள் விற்பனையாகும்..!

வரும் 2017-ஆம் ஆண்டு இந்தியாவில் விற்பனையாகும் செல்பேசிகளின் எண்ணிக்கை 265 மில்லியனாக இருக்கும் எனவும், அதில் 116 மில்லியன் திறன்பேசிகளாக இருக்கும் எனவும் புதிய அறிக்கை ஒன்றின் வாயிலாக தெரியவந்துள்ளது.

சந்தை ஆராய்ச்சி நிறுவனமான ”சைபர்மீடியா ரிசர்ச்” என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை இந்தியாவில் சுமார் 197.5 மில்லியன் செல்பேசிகள் விற்பனையாகி உள்ளன. இதில் இந்தியாவின் விழாக் காலங்கள் அடங்கிய மூன்றாம் காலாண்டில் மட்டும் 78.4 மில்லியன் செல்பேசிகள் விற்பனையாகியுள்ளன. மூன்றாம் காலாண்டில் விற்பனையான 78.4 மில்லியன் செல்பேசிகளில் 66 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவையாகும்.

இந்தியாவில் விற்பனையான திறன்பேசிகளில் 98 சதவீதம் கூகுளின் ஆன்ட்ராய்டு இயங்குதளமும், அந்த 98 சதவீதத்தில் 25 சதவீதம் ஆன்ட்ராய்டு மார்ஷ்மாலோ இயங்குதளமும் செயல்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ஒவ்வொரு நொடியும் ஒரு 4ஜி திறன்பேசி விற்பனையாகியுள்ளது. இவற்றில் 66 சதவீதம் ”பேப்ளட்” வகை திறன்பேசிகளாகும். இந்தியாவில் விற்பனையாகியுள்ள திறன்பேசிகளில் 64 சதவீதம் குவாட்கோர் பிராசரை கொண்டிருக்கின்றன.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி:http://zeenews.india.com/mobiles/mobile-handsets-shipments-in-india-set-to-reach-265-million-by-fy-2017_1951917.html

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

விளம்பரம்

“அனைவருக்கும் இலவச இணையதளம்” என்ற திட்டத்தின் கீழ்
கிருஷ்ணகிரியை சேர்ந்த Clouds India நிறுவனம் வழங்குகிறது “இலவச இணையதள இடம்”

ஆம்,
“சொந்த இணையதளம் உலகையே சொந்தமாக்கும்”

மேலும் விபரங்களுக்கு
https://cloudsindia.in/
Mobile No : 9943094945

நேரடியாக பதிவு செய்ய
https://goo.gl/w5HlKV

இந்த சலுகையை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்..




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *